டிக்டாக் புகழ் ரவுடிபேபி என அனைவராலும் அறியப்படும் சூர்யா இன்று காலை திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டிக்டாக் புகழ்

டிக்டாக் புகழ் சூர்யாவை தெரியாதவர்களே இல்லை. ரவுடிபேபி என அனைவராலும் அறியப்படும் இவரது இயற்பெயர் சுப்புலட்சுமி. தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்கு டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்த அவர், நாளடைவில் லைக்குகள் அதிகம் கிடைத்ததால், ஆடைகளை குறைத்துக் கொண்டார். பின்னர் ஆபாச வார்த்தைகளை அசால்ட்டாக பேசி டிக்டாக்வாசிகளிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

ஆபாச பதிவு

தொடர்ந்து ஆபாச பதிவுகளை பதிவு செய்து வந்த சூர்யா, சில மோசமான விமர்சனங்களால் ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாகினார். இதனால், கெட்ட கெட்ட வார்த்தைகளை சர்வசாதாரணமாக பேச ஆரம்பித்தார். அதன் விளைவாக டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கிறார்கள் என்று கண்ணீருடன் ஒரு பேட்டியும் தந்தார் சூர்யா.

சுப்புலட்சுமி எனும் சூர்யா

திருப்பூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா, சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றார். அந்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், அவர் அங்கேயே தங்க நேர்ந்துவிட்டது. பிறகு மத்திய அரசின் வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானத்தில் அவர் கடந்த 16ம் தேதி கோவைக்கு வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு லாட்ஜிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து வீடு திரும்பிய சூர்யாவை கொரோனா டெஸ்டுக்கு அழைத்துச் செல்ல சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார், அவரது வீட்டுக்கு சென்றனர். அப்போது ஏசியுடன் கூடிய தனி அறை, தனி சாப்பாடு, பாத்ரூம் வசதி போன்றவைகளை செய்து கொடுத்தால் மட்டுமே கொரோனா டெஸ்டுக்கு வருவேன் என்றும் இல்லையேல் அங்கேயே பிரச்சனை செய்வேன் எனவும் கூறி அவர்களை அதிர வைத்தார் ரவுடிபேபி சூர்யா.

மிரட்டல்?

சூர்யாவின் அட்ராசிட்டியை தாங்க முடியாமல் எல்லாவற்றிற்கும் தலையாட்டிய போலீஸ், இறுதியாக அவரை கொரோனா டெஸ்டுக்கு அழைத்துச் சென்றனர். இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றிய ஓரிரு நாட்களிலேயே மற்றுமொரு சம்பவத்தை செய்தார் ரவுடிபேபி. தன்னை படம் பிடித்த தொலைக்காட்சி செய்தியாளரை ‘என்கிட்ட வச்சிக்கிட்டினா நாறிடுவ, கொன்னுடுவேன்’ என வீரவசனம் பேசி கொலை மிரட்டம் விடுக்கும் பாணியில் டிக்டாக் வீடியோவை வெளியிட்டார். இதனையடுத்து ரவுடிபேபி சூர்யா மீது சம்மந்தப்பட்ட செய்தியாளர் புகார் அளிக்க, அவர்மீது ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை முயற்சி

இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டில் ரவுடிபேபி சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சூர்யாவுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. சூர்யா எதனால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார், என்ன காரணம், என்பது உடனடியாக தெரியவில்லை. இது சம்பந்தமாக விசாரணையையும் போலீசார் துவக்கி உள்ளனர். தொடர்ந்து சர்ச்சைகளை கிளப்பி வரும் சூர்யா, திடீரென தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here