சுஷாந்த் சிங் மரணத்தின் எதிரொலியாக ராமெளலியின் RRR படத்தில் ஆலியா பட் நடிப்பதற்கு பாலிவுட் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மரணம், சர்ச்சை

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனஅழுத்தம் காரணமாக சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாக கூறி வந்த நிலையில், அவரது இறப்புக்கு பின்னால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. இது தற்கொலை இல்லை, கொலை என்று பாலிவுட் ரசிகர்கள் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் சிங்கை மேடையில் வைத்தும், பொது இடத்திலும் பலரும் கிண்டலும் கேலியும் செய்து அவமானப்படுத்திய நிறைய ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த லிஸ்டில் நடிகை ஆலியா பட் வருகிறார் என்பது தான் குறிப்பிடத்தக்கது.

ஆலியா பட்க்கு எதிர்ப்பு

சுஷாந்த் சிங் அவமானப்பட்டதில் ஆலியா பட்க்கும் பங்கு இருப்பதாக கருதும் அவரது ரசிகர்கள், ராஜமெளலியின் RRR படத்தில் ஆலியா பட்டை நடிக்க வைக்கக்கூடாது என்று ராஜமௌலியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் RRR படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஆலியா பட்டை தேர்ந்தெடுக்க அவரது அப்பாவித்தனமான நடிப்புதான் காரணம் என ராஜமெளலி விளக்கமளித்துள்ளார்.

ராஜமெளலி விளக்கம்

‘RRR’ படத்தில் ஆலியா பட்டை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி ராஜமௌலி தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது; “இது லவ் triangle கதை அல்ல. அதனால் ஆலியா பட், ராம் சரண் அல்லது ஜூனியர் என்.டி.ஆரின் ஜோடி என கூற முடியாது. ஆனால் அவரால் அப்பாவித்தனமாக, பாதிக்கப்பட்டவராக கச்சிதமாக நடிக்க முடியும். அந்த கதாபாத்திரத்தில் நான் எதிர்பார்த்தது அதுதான். அதற்கு ஆலியா பட் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்ந்தெடுத்தேன். ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு இணையாக தனது இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் பெண்ணாக ஆலியா பட் கச்சிதமாக நடிப்பார்” என ராஜமௌலி கூறியுள்ளார்.

கோவிட் 19

ஆலியா பட் இந்த படத்திற்கு தனது பகுதிகளை ஏப்ரல் மாதத்திலேயே நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் மீண்டும் ஷூட்டிங் அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது” என்றும் ராஜமெளலி குறிப்பிட்டுளளார். இந்த நிலையில் ‘RRR’ படத்தில் ஆலியா பட் நடிக்க ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘RRR’ கதை

பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட ஒன்று என்பதால், ராஜமெளலியின் அடுத்த படமான ‘RRR’ படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ‘RRR’ மோஷன் போஸ்டருக்கு கிடைத்த வரவேற்பை அதை உறுதிப்படுத்தியது. ராம் சரண் நடித்துள்ள அல்லுரி சீதாராம ராஜு கதாபாத்திரம் தீயை பிரதிபலிப்பது போலவும், ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள கொமாரம் பீம் கதாபாத்திரம் தண்ணீரை பிரதிபலிப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தீயை அணைக்கும், தீ தண்ணீரை ஆவியாக்கும், அவர்கள் இருவரும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? என்பதுதான் படத்தின் கதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here