தற்பொழுது தெலுங்கு திரையுலகின் ஹாட் நீயுஸ், நடிகை நிஹரிகாவின் திருமணம். தமிழில் இவர் நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ அவரது இரண்டாவது படம்.மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் நாகபாபுவின் மகளான இவர் தெலுங்கில் ’ஒக்க மனசு’ மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி சிரஞ்சீவ்யின் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ உள்ளிட்ட 4 படங்களில் நடித்துள்ளார். சில வலைத் தொடர்களைத் தயாரித்தும் வருகிறார். சிறிது காலமாக, நடிகர் பிரபாஸுக்கும் இவருக்கும் திருமணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. அவை அனைத்தையும் பொய்யாக்கியது இந்த செய்தி.

ஊரடங்கில் திருமணங்கள்

ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வருபவருக்கே தனது கல்யாணம் பிரம்மாண்டமாக நடக்க வேண்டும், வி.ஐ.பிக்களெல்லாம் வர வேண்டும், நிறைய பேரின் கவனத்தை ஈர்க்கும்விதம் அமைய வேண்டும் என்று பல தரப்பட்ட ஆசைகள் இருக்கும். ஒரு நட்சத்திரப் பட்டாளமே உள்ள குடும்பத்தில் பிறந்த பெண் என்றால் கேட்கவா வேண்டும்.

வித்தியாசமான அறிவிப்பு

ஆனால் கவன ஈர்ப்பு என்பது பொருட் செலவை மட்டுமே சார்ந்ததில்லை. வித்தியாசமான அணுகுமுறைதான் முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் ஒரு சினிமா டீசரைப்போல் தன் திருமண செய்தியை வெளியிட்டுள்ளார் நிஹாரிக்கா. அதில் முதலில் ஒரு காஃபி கப்பில் தான் திருமதி ஆகப்போவதை சொல்லும் வகையில் ஒரு படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டார். அடுத்த நாள் யார் என்று முகம் தெரியாத ஒரு நபரை அணைத்தபடி ஒரு புகைப்படம். அதற்கும் அடுத்த நாள் முழு அறிவிப்பு என்று அசத்தியுள்ளார்.

யார் மணமகன்?

அவர் மணக்கவிருப்பது, ஆந்திராவின் குண்டூர் பகுதியின் ஐஜி மகன் சைத்தன்யாவை. சைத்தன்யா கைகடிகாரங்களை சேகரிப்பதிலும், ஸ்ட்ரீட் ஃபோட்டோகிராஃபியிலும் ஆர்வம் கொண்டவர் என்று தெரிய வந்துள்ளது. புகழ்பெற்றி புகைப்படக் கலைஞர் ஜோசப் ராதிக் மாப்பிள்ளை-பெண்ணை வீடியோ சாட் மூலம் புகைப்படம் எடுத்ததாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இத்திருமணத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியே முன் நின்று பேசி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தோடு எல்லாவிதமான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் நிஹாரிக்கா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here