சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளியான டிடி என்கிற திவ்யதர்ஷினி, தற்போது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இவரது தந்தை நீலகண்டன் 17 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இறந்த தன் தந்தைக்கு டிடி ஒரு கடிதம் எழுதி, அதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த கடிதத்தில் டிடி கூறியிருப்பதாவது; இன்று நான் எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களுக்கு ஒரு சட்டை வாங்கித் தர முடியவில்லை என்பதுதான் எனக்கு மிகப்பெரிய வருத்தம். இந்த விதத்தில் என் கடைசி மூச்சு வரை ஏழையான, பாவப்பட்ட மகளாகவே இருப்பேன் என்று உருக்கத்துடன் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here