சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து கருத்து பதிவிட்ட நெட்டிசனை, நடிகை அபர்ணா நாயர் தேடிக் கண்டுபிடித்து நூதன தண்டனை கொடுத்துள்ளார்.

ஆபாச கருத்து

மலையாளத்தில், ரன் பேபி ரன், கல்கி, மல்லுசிங் உள்பட பல படங்களில் நடித்தவர் அபர்ணா நாயர். தமிழில் ‘எதுவும் நடக்கும்‘ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அபர்ணா நாயர் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களையும், கருத்துகளையும் அடிக்கடி பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் அபர்ணா நாயரை ஆபாசமாகவும் மோசமாகவும் சித்தரித்து ஒருவர் வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார்.

கடும் ஆத்திரம்

இது அபர்ணா நாயருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தன்னை கொச்சைப்படுத்திய நபரின் பெயரையும் முகநூல் பக்கத்தையும் குறிப்பிட்டு வலைத்தளத்தில் கண்டித்தார். மேலும் “என் மீது அக்கறை கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்துகிறேன். இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உங்கள் வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். இதுபோல் ஆபாசமான கருத்துகளை பதிவிடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள் என கூறினார்.

இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் அவர் புகார் அளித்தார். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபரை பிடித்து வைத்து அபர்ணா நாயருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று ஏன் இப்படி வக்கிரமாக பேசினாய் என்று அந்த நபரை எச்சரித்ததாக அபர்ணா வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த நபரிடம் இனிமேல் எந்த பெண்ணுக்கும் அப்படி செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கியதாகவும், அவரது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு புகாரை வாபஸ் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here