தியேட்டர்கள் திறக்க காலதாமதம் ஆகும் என்பதால் மீண்டும் ‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரிலீஸ் எப்போது

தர்பார் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். குஷ்பு, மீனா, கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். முதன்முதலாக சிறுத்தை சிவாவுடன் ரஜினி கைகோர்க்கும் ‘அண்ணாத்த’ படம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகாது என்றும் 2021ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் எனவும் படக்குழு கூறியது. ஆனால் கொரோனா பிரச்சனையால் பொங்கலுக்கும் வெளிவராது எனத் தெரிகிறது.

மகிழ்ச்சியில் மீனா, குஷ்பு

குஷ்புவும், மீனாவும் பல படங்களில் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். தற்போது மீண்டும் ‘அண்ணாத்த’ படம் மூலம் அவர்கள் இணைகின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தங்களுக்கு மிகுந்த ஆர்வமும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக குஷ்புவும், மீனாவும் கூறியுள்ளனர். ஹைதராபாத்தில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சனையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி திட்டவட்டம்

கொரோனா பிரச்சனை முழுவதும் முடிந்தால்தான் நடிக்க வருவேன் என நடிகர் அஜித் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேபோல், கொரோனா முழுவதுமாக ஒழிய வேண்டும். அப்பொழுது தான் நடிப்பேன் என்றும் ரஜினி கூறி வருகிறார். என்னுடைய ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம் என்றும் அதன் பிறகுதான் படப்பிடிப்பு எல்லால் எனவும் ரஜினி கூறியுள்ளார்.

தள்ளிப்போகும் ரிலீஸ்?

கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட ‘அண்ணாத்த’ திரைப்படம், அடுத்தாண்டு பொங்கலுக்குத் தான் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்படியும் இந்தாண்டு படப்பிடிப்புகள் முடிந்தாலும், கொரோனா பிரச்சனை ஓய்ந்து மீண்டும் தியேட்டர்கள் திறக்க காலதாமதமாகும் எனத் தெரிகிறது. எனவே, மீண்டும் ‘அண்ணாத்த’ பட ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அடுத்தாண்டு கோடை விடுமுறைக்குத் தான் அண்ணாத்த ரிலீஸ் ஆகும் என்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here