நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்குநர் ஷங்கர், நடிகர் விஜய் இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசி வருகின்றனர்.

‘முதல்வன்’

இயக்குநர் ஷங்கர் முதல்வன் முதல் பாகத்திலேயே விஜய்யிடம் கதையை கூறியுள்ளார். ஆனால் ஒருசில காரணத்தினால் விஜய் அந்த கதையை அப்போது தவிர்த்துவிட்டார். அதற்கு பின்புதான் அந்த கதையை ஆக்ஷன் கிங் அர்ஜுன் இடம் கூறினார். அவருக்கு கதை பிடித்து போக, உடனடியாக அர்ஜுனை நடிக்க வைத்து படத்தை ரிலீஸ் செய்தனர். அது மக்களிடம் மிகுந்த வரவேற்பையும் பெற்று, நல்ல வசூலையும் வாரி குவித்தது. அது மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பையும் ஏற்படுத்தியது. தமிழ் சினிமாவில் எத்தனையோ அரசியல் படங்கள் வந்திருந்தாலும், இந்த முதல்வன் திரைப்படம்தான் அரசியல்வாதிகள் நெற்றிப்பொட்டில் அடித்தபடி கதை அமைந்திருந்தது.

ஐடி ரெய்டு

ரொம்ப காலமாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை நான் அரசியலுக்கு வருவேன் என்று ஒருமுறை கூட விஜய் கூறியதில்லை. ஆனால் தெறி, மெர்சல், சர்க்கார் போன்ற படங்களில் அரசியல் வசனங்களை பேசி அரசியல் வட்டாரங்களில் பல விமர்சனங்களையும் வாங்கினார் நடிகர் விஜய். இதனால் விஜய்யின் பல படங்களை தமிழ்நாடு அரசு வெளியிடக்கூட தடை விதித்திருக்கிறது. விஜய்யின் படங்கள் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் நன்றாக கல்லா கட்டி வருவதால், அவர் வீட்டுக்கு வருமான துறையின் சோதனையும் நடத்தப்பட்டது.

முதல்வன் 2?

இப்போது இருக்கும் சூழ்நிலையில் நடிகர் விஜய் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தால், கண்டிப்பாக மக்கள் மனதில் ஒரு நல்ல வரவேற்பை ஏற்படுத்தும் என்று இயக்கநர் ஷங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கண்டிப்பாக இந்தப் படத்தில் விஜய் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய்யின் படங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவதால், முதல்வன் 2வில் அவர் நடிப்பாரா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இதற்கிடையில் ஒரு மேடையில் பேசிய விஜய், நான் ஏற்கனவே ஷங்கரின் ரீமேக் படமான நண்பனில் நடித்து விட்டேன் என்றும் அவரது சொந்த கதையில் நடிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசை உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

அரசியல் பிரவேசம்?

ரஜினியும், கமலும் ஏற்கனவே அரசியலில் குதித்துவிட்டனர். ஆனால் விஜய் அரசியலுக்கு வருவதாக இன்னும் யாரிடமும் அதைப் பற்றி கூறவில்லை. கமல், ரஜினியைப் போல விஜய்யும் பல படங்களில் அரசியல் வசனங்களை பேசி வருவதால், அவரும் அரசியலுக்கு வந்துவிடுவார் என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால், விஜய் தரப்பிலோ அவருக்கு அரசியல் ஆசை இல்லை என்று கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here