இந்தியா – சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருதரப்பு படைகளுக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி, 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தனர். உயிரிழந்த வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனியும் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி, கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here