ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-வது படமாக உருவாகியுள்ள No Time To Die படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டேனியல் கிரெய்க்

No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்’ பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார்.

அடுத்தடுத்த தள்ளிவைப்பு

இந்தப் படம் ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா உள்பட உலகின் மற்ற நாடுகளிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி No Time To Die திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 12-ம் தேதி இங்கிலாந்திலும், நவம்பர் 25-ல் அமெரிக்காவிலும் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டது.

25வது பகுதி

பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் 007 கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 25-வது படமாக No Time To Die தயாராகி வருகிறது.

ரிலீஸ் தேதியில் மாற்றம்

இந்நிலையில், கொரோனா பிரச்சனையால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது படக்குழு. அதன்படி நவம்பர் 25-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20-ல் அமெரிக்கா உள்பட உலகின் மற்ற நாடுகளில் No Time To Die திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் திட்டமிட்டபடி நவம்பர் 12-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here