உலக மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் கொரோனா வைரசை தெய்வமாக நினைத்து கேரளாவில் ஒருவர் தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகிறார்.

கொரோனா

உலகம் எங்கும் பெரும் அச்சுறுத்தலையும், நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எண்ணிலடங்கா உயிர்ச்சேதத்தையும், பொருளாதார இன்னல்களையும் விளைவித்திருக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 3 லட்சத்திற்கும் மேலானோர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை ஒரு தெய்வமாக்கி வழிபாடு நடத்தி வருகிறார் ஒருவர்.

தெய்வக் கொரோனா

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடைக்கால் எனும் பகுதியில் வசித்து வருபவர் அனிலன். இவர் கொரோனா வைரஸை தெய்வமாகக்கருதி, அம்மன் வடிவில் அமைத்து, தினந்தோறும் தனது பூஜை அறையில் வைத்து வழிபாடு நடத்தி வருகிறார். கொரோனா வைரஸை தெய்வமாக்கி வழிபாடு நடத்தும் அனிலனின் வழிபாட்டு வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், இந்த செயல் விளம்பரம் தேடும் முயற்சி என சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து பலரும் பலவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளனர். கொரோனாவை தெய்வமாக்கியுள்ள அனிலனின் செயல் மூடநம்பிக்கையான
செயல் எனவும் சிலர் விமர்சித்துள்ளனர்.

நலத்திற்கான பிரார்த்தனை

கொரோனா வைரஸ் தெய்வ வழிபாட்டை நடத்துகிற அனிலனின் இச்செயலை பலரும் கேலி செய்துவரும் நிலையில், இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அனிலன் கூறுகையில்; அரசியலமைப்பின்படி எனக்குள்ள அடிப்படை உரிமையில் கொரோனா வைரஸை தெய்வமாக நினைத்து பூஜை செய்து வருகின்றேன். கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காக்கப் போராடும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்தூறையினர் மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் என அனைவரின் நலனுக்காகவே பிரார்த்தனை செய்கிறேன்.

அழிவைத் தரும்

நான் என்னுடைய வழியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுப் பணியை செய்து வருகின்றேன். என்னால் முடிந்தவரை செய்ய முடிந்த விழிப்புணர்வுப் பணியாக இதை நினைக்கின்றேன். கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோயில் மற்றும் மத வழிபாட்டு தலங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இது அழிவைத்தரும். இவ்வாறு அனிலன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here