ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்தியன் பட பாடலை மிஞ்சும் அளவிற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் பாடல்கள் உருவாகும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேரலையில் உரையாடல்

உலக நாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் சமூக வலைத்தளம் மூலம் இன்று நேரலையில் உரையாடினர். அப்போது திரைத்துறையின் அனுபவங்கள், அதிலுள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் இருவரும் மனம்விட்டு பேசினர். இரண்டு ஜாம்பவான்கள் சமூக வலைதள நேரலையில் கலந்துரையாடியதை, லட்சக்கணக்கான சமூக வலைத்தளவாசிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

முதலில் பிடிக்கவில்லை

இந்த நேரலையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கமல்ஹாசனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல் பதிலளிக்கையில்; இசையமைப்பாளர் ரஹ்மான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக் கூடியவர். ஒரு பாடலில் இடம்பெற்ற இசை மீண்டும் ரிப்பீட் ஆகாது. இந்தியன் படத்தில் இடம்பெற்ற ‘கப்பலேறி போயாச்சு’ என்ற பாடல் முதலில் கேட்கும்போது எனக்கு பிடிக்கவில்லை. இயக்குநரிடமும் சொன்னேன். ஆனால் படத்தின் சூட்டிங் போது அந்தப் பாடல் வேற லெவலில் இருந்தது.

 

வேற லெவலில் இருக்கும்

எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர்களில் ஏ.ஆர். ரஹ்மானும் ஒருவர். ‘இந்தியன்’ படத்தின் பாடல்களை மிஞ்சும் அளவிற்கு ‘தலைவன் இருக்கின்றான்’ பாடல் உருவாகும். அப்படி இல்லை என்றால் இருவரும் இணைந்து ஆல்பம் வெளியிடுவோம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here