விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ‘செந்தூரப்பூவே’ என்ற புதிய சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியலுக்கு ட்ஃப் கொடுக்குமா என சீரியல் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘செம்பருத்தி’

கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், பல தொலைக்காட்சிகள் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற பழைய நிகழ்ச்சிகளையே மீண்டும் ஒளிபரப்பி வருகிறது. முன்னணி சீரியல்களை போட்டி போட்டு வழங்கும் சன் டிவியும், ஜீ தமிழ் தொலைக்காட்சியும் தங்களின் பழைய சீரியல் எபிசோடுகளையே மீண்டும் ஒளிபரப்பின. இதில் ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

களமிறங்கிய விஜய் டிவி

இந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. உடனே சூட்டோடு சூடாக விஜய் டிவி மட்டும் ஜூன் 8-ம் தேதி முதல் ‘செந்தூரப்பூவே’ என்கிற புது சீரியலை ஒளிபரப்பி நேயர்களை தன்வசம் ஈர்த்து இருக்கிறது. சீரியல்கள் ஒளிபரப்புவதில் முதலிடத்தில் இருக்கும் சன் டிவி மற்றும் ஜீ தமிழ் டிவி இன்னும் வழக்கமான சீரியல்களை ஒளிபரப்பாத நேரத்தில், விஜய் டிவி முந்திக்கொண்டது.

‘செந்தூரப்பூவே’

தொலைக்காட்சிகளில் தற்போது 9:30 மணி ஸ்லாட்டை விட, 9 மணி ஸ்லாட் முக்கிய இடம் பிடித்துள்ளதால், ஜீ தமிழ் டிவிக்கு போட்டி தரும் வகையில் சன் டிவி, விஜய் டிவி சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில்தான் விஜய் டிவி ‘செந்தூரப்பூவே’ சீரியலை ஒளிபரப்பத் துவங்கி உள்ளது. ‘செந்தூரப்பூவே’ சீரியலில் நடிகர் ரஞ்சித் நடித்து இருப்பது பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டி இருக்கிறது. இவருக்கு ஜோடியாக கலர்ஸ் தமிழ் டிவி சீரியலான ‘தறி’யில் நடித்த ஸ்ரீநிதி நடித்து இருக்கிறார். அம்மா இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் சிறுமியின் பாசம், அவரது கிளாஸ் டீச்சரை அம்மா போல நினைக்க ஆரம்பிக்க வைக்கிறது என்று கதை போகிறது. செந்தூரப்பூவே சீரியல், ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலுக்கு டஃப் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here