விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள க/பெ.ரணசிங்கம் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

க/பெ.ரணசிங்கம்

பி. விருமாண்டி இயக்கத்தில் க/பெ.ரணசிங்கம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  

டீசர்

மேலும், சமுத்திரக்கனி, வேல. ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. மக்கள் தங்கள் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக போராடுவது போன்று டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

OTTயில் ரிலீஸ்?

க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது. இதனால் இதன் டிஜிட்டல் உரிமத்தை வாங்க பிரபல ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. திரைப்படம் OTTயில் ரிலீஸ் செய்யப்படுமா அல்லது தியேட்டரில் வெளியாகுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here