பாராட்டுகள் தன்னை சோம்பேறியாக்குவதாகவும், அவமானங்கள் தன்னை சிறப்பாக செயல்பட வைப்பதாகவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, கடைசியாக ’96’ பட தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனைதொடர்ந்து லாக்டவுனில் தனது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் அவர், அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

சமூக வலைதளத்தில் பிரபலங்கள்

கொரோனா லாக்டவுன் காலத்தில் பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்திலேயே பொழுதை கழித்து வருகின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பலவித காமெடி போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் நடிகை சமந்தாவோ தனது சமூக வலைதளப்பக்கத்தில் அதிகமாக எதையுமே பகிரவில்லை.

சர்ச்சை, சண்டை

சில தினங்களுக்கு முன் பூஜா ஹெக்டேவின் இனஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவின் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டு, ‘இவர் அழகாக இல்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பிறகு பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டு அந்த பதிவினை நீக்கியிருந்தார். இருப்பினும் சமந்தா, சின்மயி மற்றும் ‘ஒபேபி’ படத்தின் இயக்குநர் நந்தினி ரெட்டி ஆகியோர் சமந்தாவுக்கு ஆதரவாகவும், பூஜாவுக்கு எதிராகவும் கமெண்ட் செய்திருந்தனர். இதில் சமந்தாவின் கமெண்ட் மிகவும் காட்டமாகவும், பூஜா ஹெக்டேவை அவமதிக்கும் வண்ணமும் இருந்தது.இந்நிலையில், பூஜாவின் ரசிகர்கள் #WeSupportPoojaHegde என்று ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் செய்தார்கள்.

பாராட்டு, அவமானம்

இதனிடையே ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்தார் சமந்தா. அதில் ரசிகர் ஒருவர், “உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “உங்களின் துரதிர்ஷ்டம். நீங்கள் எனக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறீர்கள் என்பதை உணரவில்லை. பாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன. அவமானங்கள் என்னைச் சிறப்பாகச் செயல்பட வைக்கின்றன என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள். எனவே நன்றி” என்று சமந்தா பதலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here