சின்னத்திரை தொகுப்பாளினி மணிமேகலை காதர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவருடன் சேர்ந்து ரம்ஜான் பண்டிகையை முஸ்லீம் போன்று முக்காடு அணிந்து கொண்டாடினார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் மணிமேகலை வெளியிட்டு வாழ்த்து கூறினார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், கணவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டீர்களா என்று கேள்வி கேட்டார். இதற்கு மணிமேகலை பதிலளிக்கையில்; என் கணவர் என்னோடு கோவிலுக்கு வருவார் நாங்கள் ஒன்றாக இணைந்து ரம்ஜான் கொண்டாடுவோம் எங்கள் வாழ்க்கை குறித்து நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here