விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸூக்கு தயாராக இருக்கும் மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிகேட் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘மாஸ்டர்’

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கடந்த மாதம் 9-ந் தேதி ரீலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

சென்சார் சர்டிபிக்கேட்

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் சென்சார் சர்டிபிக்கேட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மாஸ்டர் படத்திற்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக இருந்தது. 

பொய்யான புகைப்படம்

ஆனால், அது முற்றிலும் பொய்யான ஒரு புகைப்படம் என தெரிய வந்துள்ளது. சென்சார் போர்டில் இருந்து அதுபோன்ற எந்த விஷயமும் வெளியாகவில்லை என்பது கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here