மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யாவும், சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

‘அய்யப்பனும் கோஷியும்’

மலையாளத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளியான ‘அய்யப்பனும் கோஷியும்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றி அடைந்தது. ஒரு செல்வாக்குமிக்க முன்னாள் ராணுவ வீரரான பிருத்விராஜூக்கும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான பிஜூ மேனனுக்கும் நடிக்கும் மோதலே படத்தின் கதை.

தமிழில் ரீமேக்

மலையாளத்தில் ஹிட்டான இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ஆர்யாவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை

சசிகுமார் நடிப்பது உறுதியான நிலையில், ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிகிறது. கொரோனா ஊரடங்கு முடிவுற்ற பின் இதுதொடர்பான பணிகள் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here