விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

க/பெ.ரணசிங்கம்

பி. விருமாண்டி இயக்கத்தில் க/பெ.ரணசிங்கம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  

பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மேலும், சமுத்திரக்கனி, வேல. ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

வரவேற்பு

அதனைதொடர்ந்து இன்று காலை க/பெ.ரணசிங்கம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. மக்கள் தங்கள் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக போராடுவது போன்று டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here