விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக அபுதாபி சென்ற பிரபல இந்தி நடிகை மவுனிராய் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக அங்கேயே சிக்கி தவிக்கிறார்.

சிக்கி தவிப்பு

பிரபல இந்தி நடிகை மவுனிராய், விளம்பர படம் ஒன்றில் நடிப்பதற்காக அபுதாபி சென்று இருந்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதால், மவுனிராயால் இந்தியா திரும்ப முடியவில்லை. இதனால் கடந்த 2 மாதங்களாக அபுதாபியிலேயே சிக்கி தவிக்கிறார்.

4 உடை தான் இருக்கு

இதுகுறித்து அவர் கூறுகையில்; விளம்பர படப்பிடிப்பை சில நாட்களில் முடித்து விடலாம் என்று சொல்லி என்னை அழைத்து வந்தனர். இதனால் 4 நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டுமே எடுத்து வந்தேன். ஊரடங்கினால் என்னால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை. 4 நாள் உடைகளோடு 2 மாதங்களாக அபுதாபியில் தவித்துக்கொண்டு இருக்கிறேன்.

எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

இப்படி ஒரு கஷ்ட நிலைமை ஏற்படும் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை. ஒவ்வொரு நாளும் விமானம் எப்போது கிளம்பும் என்பதை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். தெரிந்த சில நண்பர்கள் இருப்பதால் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன். இந்தியா திரும்பும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here