ஆந்திராவில் அரசுப் பேருந்தை கடத்திச் சென்ற கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

ஊரடங்கால் தவிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயபுரா பகுதியைச் சேர்ந்தவர் முசாமில் கான். இவர் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நீண்ட நாட்களாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்துள்ளார்.

அரசுப் பேருந்து கடத்தல்

நேற்று நடந்தே ஊர் திரும்பலாம் என முடிவு செய்த முசாமில் கான், அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்துள்ளார். பின்னர் அங்குள்ள பணிமனையில் அரசுப் பேருந்து ஒன்று சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர், திடீரென அந்த பேருந்தை திருடிக் கொண்டு பெங்களூருக்கு புறப்பட்டார்.

மடக்கிப் பிடித்த போலீஸ்

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பணிமனை ஊழியர்கள், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், அனந்தபுரம் அருகே அந்த பேருந்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் பேருந்தை கடத்தி வந்த முசாமில் கானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here