கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்துள்ளார்.

கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய – மாநில அரசுகள் முழுமூச்சுடன் போராடி வருகிறது.

அமெரிக்காவில் சன்னி லியோன்

இந்த நிலையில், கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளார். மகள் நிஷா, மகன்கள் நோவா மற்றும் ஆஷர் ஆகியோருடன் தோட்டத்தின் ஒரு படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மகிழ்ச்சியான படத்தை சன்னிலியோன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பாதுகாப்பாக இருக்க வேண்டும்

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழ்க்கையில் நீங்கள் குழந்தைகளைப் பெறும்போது உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நல்வாழ்வு பின் தள்ளப்படும். நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளை இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளி “கொரோனா வைரஸ்” க்கு எதிராக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உணர்ந்தோம். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரகசிய தோட்டத்திலிருக்கும் எங்கள் வீடு இதுதான். என் அம்மா எனக்கு என்ன செய்ய விரும்பியிருப்பார் என்று எனக்குத் தெரியும். மிஸ் யூ அம்மா. மகிழ்ச்சியான தாய்மார்கள் தினம்!” என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here