விஜய்யும், அஜித்தும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என் பிரபல நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

சினிமா ரசிகர்கள்

இதுதொடர்பாக பேசிய தமன்னா, தென்னிந்திய சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கின்றன. அவர்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாக, அவர்களது வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒரு வி‌ஷயமாக சினிமா உள்ளது.

ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்

‘வீரம்‘தான் அஜித்துடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்சியல் வெற்றிப் படமாக இருந்தாலும் ஒரு நடிகையாக எனக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்களை வழங்கிய படம் அது. எனக்குத் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

அற்புதமான ரசிகர்கள்

விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே அற்புதமான ரசிகர் கூட்டம் உள்ளது. தொடர்ந்து அந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என தமன்னா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here