தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன், தன்னை சிலர் மிரட்டி இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்

.

முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் மாதவன். திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன் இந்தித் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். அவர் தனது நடிப்பை ‘பனேகி அப்னி பாத்’ என்னும் தொலைக்காட்சி தொடர் மூலம் ஆரம்பித்தார். இவர் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் நடித்ததற்காக பிலிம் ஃபேர் விருது வாங்கியுள்ளார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்த மாதவன், மணி ரத்தினத்தின் ‘அலைபாயுதே’ திரைப்படம் மூலம் பிரபலம் ஆனார். பிறகு இவர் தமிழில் நிறையப் படங்களில் நடித்து உள்ளார். அமீர் கானுடன் இந்தியில் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் வெற்றி பெற்றது.

ஹிட் படங்கள்

தமிழில் மாதவன் நடித்த ரன், காண்ணத்தில் முத்தமிட்டால், அன்பே சிவம், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. தற்போது விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது கல்லூரி காலம் பற்றி மாதவன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

பெண்களின் நாயகன்

அதில், எனக்கு காலேஜ்ல நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருந்தாங்கன்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. எனக்கு இருந்த நண்பர்களில் நிறைய பேர் பொண்ணுங்களா இருந்தாங்க. அப்படிதான் சொல்லனும். எப்பவுமே என்னை சுத்தி பெண்கள் இருக்கிறதுனால, சீனியர்ஸ் என்னை மிரட்டி இருக்காங்க. காலேஜ் ரவுடியிசம், சண்டையிலயும் என் பங்கு இருந்துருக்கு” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here