ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்களால் தளபதி விஜய்யின் 65வது படமாக துப்பாக்கி 2 வெளிவரும் என்ற நம்பிக்கையால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

‘மாஸ்டர்’

2019 தீபாவளிக்கு பின், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘மாஸ்டர்’ படம் வெளியாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோன வைரஸின் கோரத்தாண்டவத்தால் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ‘மாஸ்டர்’ வெளியீடு தடைப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என 3 வெற்றி படங்களை கொடுத்த ஏ.ஆர். முருகதாஸுடன் விஜய் மீண்டும் கூட்டணி அமைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

துப்பாக்கி 2?

அப்படி ஒரு வேளை இவர்கள் ஒன்று சேர்ந்தால் அது துப்பாக்கி 2ஆக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கும் போதே, அது நடக்கும் என பச்சை கொடி அசைத்துள்ளார் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி படத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சந்தோஷ் சிவன். இதனை பார்த்து குஷி அடைந்த விஜய் ரசிகர்கள், #Thuppakki2 என்கிற ஹேஷ்டேகை வைத்து ஏகப்பட்ட ட்வீட்டுகள் போட்டு அதை டிரெண்டாக்கவிட்டுள்ளனர். 

பாகம் 2 பண்ணாத தளபதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் , விஷால், லாரன்ஸ் ஆகியோர் இரண்டாம் பாகம் நடித்துள்ளனர். ஆனால் விஜய் இன்னும் அவ்வாறு நடிக்காததால் அவருடைய முதல் Part-2 ஆக துப்பாக்கி 2 அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here