இரண்டாம் எலிசபெத்ராணி பதவியேற்ற நாள்
எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி என்ற இயர்பெயரை கொண்ட எலிசபெத்ராணி 1926ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி லண்டனில் பிறந்தார். பிறந்த வீட்டிலியே கல்வியும் கற்றார். இரண்டாம் எலிசபெத் ராணி, தனது தந்தை ஆறாம் ஜார்ஜ் 1952ம் ஆண்டு இறந்த பிறகு அரசு வாரிசாக நியமிக்கப்பட்டார்.
1953ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி இரண்டாம் எலிசபெத் ராணிக்கு முடிசூட்டு விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. உலகில் முதன்முதலாக இந்த பதவியேற்பு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 54 நாடுகளை உறுப்பினராக கொண்ட பொதுநல வாரியத்தின் தலைவரான எலிசபெத் ராணி, இரண்டாம் உலகப் போரின் போது சேவைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மகன்கள், பேரக்குழந்தைகள் என்று வாரிசுகளை கண்டு முதுமைத் தன்மை அடைந்துள்ள இவருக்கு, அரசியலில் வெள்ளி விழா, பொன் விழா, பவள விழா ஆகிய இலக்குகளை எட்டிய பெருமை உண்டு.