தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், காதலர் தினத்தன்று காதலரை கரம் பிடிக்கப் போவதாகவும் நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை நடிகை

பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், 2016ஆம் ஆண்டு ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை பெற்றார். இருப்பினும் சில சர்ச்சைகள் மற்றும் புகார்களால் அவருக்கு வழங்கப்பட்ட அழகி பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

பிக் பாஸ் புகழ்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், இயக்குநர் சேரன் மீது வைத்து குற்றச்சாட்டின் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த அவர், தொடர்ந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு, நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். இருப்பினும் மீரா மிதுன் அவற்றை பெரும்பாலும் கண்டு கொள்வது இல்லை.

மணக்கோலம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் பக்கம் தலைக்காட்டாமல் இருந்த மீரா மிதுன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மணக்கோலத்தில் இருக்கும் வீடியோக்களையும், போட்டோக்களையும் வெளியிட்டு ரீஎன்ட்ரி கொடுத்தார். அதை பார்த்தவர்கள், என்ன மீரா கல்யாணமாகப் போகிறதா எனக் கூறி ஆச்சரியப்பட்டனர்.

உண்மைதான்

சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த மீரா மிதுன், தனக்கு திருமணம் நடக்க இருப்பது உண்மைதான் என கூறியுள்ளார். மேலும் தனது திருமணம் குறித்த சில தகவல்களையும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்; எனக்கும், எனது காதலருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.

திருமண தேதி

இதற்கு முன் சந்திக்காத அந்த மகிழ்ச்சியை ஒரு சாதாரண பெண்ணை போல அனுபவித்து வருகிறேன். அடுத்த வருடம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் திருமணம் நடக்கவுள்ளது. ஆனால் என்னை திருமணம் செய்து கொள்ள போகிறவர் குறித்த தகவலையும் நான் சொல்லப் போவதில்லை.

ரசிகர்கள் அதிர்ச்சி

லாக்டவுன் இடைவெளி எனது வாழ்க்கையின் சிறந்த பகுதியாக மாறியுள்ளது என மீரா மிதுன் தெரிவித்திருக்கிறார். நடிகை மீரா மிதுனுக்கு சத்தமில்லாமல் நிச்சயதார்த்தம் நடந்திருப்பது, அவரது ரசிகர்களுக்கு வியப்பையும், சற்று அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here