ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக இருக்கும் சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிகை சிம்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் சாதனை
2005-ம் ஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை படைத்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் உருவான இப்படத்தில், ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சந்திரமுகி திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றது.
சந்திரமுகி 2
தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சந்திரமுகி படத்தில் மனோதத்துவ மருத்துவராக வரும் ரஜினிகாந்த், பிளாஷ்பேக்கில் வேட்டையன் என்ற கொடுங்கோல் மன்னனாக நடித்து இருந்தார். அவரால் கொலை செய்யப்படும் சந்திரமுகி, ஜோதிகா உடலுக்குள் ஆவியாக புகுந்து பழிவாங்க துடிப்பதுபோல் திரைக்கதையை அமைத்து இருந்தனர்.
சந்திரமுகி யார்?
இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும், வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் பி.வாசு தெரிவித்துள்ளார். சந்திரமுகியாக நடிக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவு வரும் வேலையில், அந்த கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவே பொருத்தமாக இருப்பார் என பேசப்பட்டது. எனவே அவரை இரட்டை வேடத்தில் உருவாக்கி ஒரு கதாபாத்திரத்தை சந்திரமுகியாக மாற்றி, அதில் ஜோதிகாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது.
மறுப்பு
இதனை மறுத்துள்ள நடிகை ஜோதிகா, சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிப்பது பற்றி தனக்கு எந்த தகவலும் இல்லை என்றும் அந்த படத்தில் நடிக்கும்படி யாரும் தன்னிடம் கேட்கவில்லை எனவும் கூறினார். மேலும், சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக இருப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.
சிம்ரன்?
இந்த நிலையில், சந்திரமுகி-2 படத்தில் சிம்ரன் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.