பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா. இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு மீரா தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மீரா மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீரா மறைவு செய்தி அறிந்த திரையுலகினர் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.