நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தெலுங்கில் முன்னணி
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் படத்திலும் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் பக்கம் நடிக்க மாட்டாரா என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு தனது ஸ்லிம் மற்றும் ஸ்டைலால் ஏங்க வைத்தார். சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். சுல்தான் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படம் வரவேற்பை பெறவில்லை.

அசத்தல்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் வெளியான புஷ்பா படத்தின் மூலம் தனது நடிப்பை நிரூபித்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து அசத்தினார். கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. 
வைரல் புகைப்படம்
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.















































