‘டக்கர்’ திரைப்படம் வரும் 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அப்படம் தனக்கு கை கொடுக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார் நடிகை திவ்யன்ஷா.
கேரியரில் தேக்கம்
மஜ்லி என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை திவ்யன்ஷா கவுசிக். அதன்பிறகு தி வொய்ப் என்ற இந்தி படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கில் ராமாராவ் ஆன் டூட்டி, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான மைக்கேல் படங்களில் நடித்தார். மைக்கேல் திரைப்படம் தோல்வி அடைந்ததால் திவ்யன்ஷா கேரியரில் தேக்கம் ஏற்பட்டது.
கை கொடுக்குமா?
ஏற்கனவே இவரது நடிப்பில் உருவான ‘டக்கர்’ திரைப்படம் வருகிற 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சித்தார்த் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில், திவ்யன்ஷா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். மைக்கேல் படத்தின் தோல்வியால் சோர்ந்திருக்கும் நடிகை திவ்யன்ஷா, டக்கர் படத்தில் முத்திரை பதிப்பாரா என்பது படம் வெளிவந்த பிறகுதான் தெரியும்.