சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அருவருப்பான படத்தில் நடித்ததாக நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

முன்னணி ஹீரோயின்

மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற பிறகு 2002 ஆம் ஆண்டு தமிழன் படத்தின் மூலம் திரை பயணத்தை தொடங்கினார் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வரும் அவர், ஹாலிவுட்டிலும் தற்போது முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தன்னைவிட 10 வயது சிறியவரான நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா சோப்ரா. அதுமட்டும் இல்லாமல் வாடகை தாய் மூலம் பெண் குழந்தைக்கும் தாயானார். இந்நிலையில், சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பிரியங்கா சோப்ரா கூறியிருக்கிறார்.

சினிமா வாய்ப்பு

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; “எனக்கு பிடிக்காமலேயே ஒரு கேவலமான படத்தில் நடிக்க வேண்டி வந்தது. சில நேரங்களில் விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கதாநாயகிகள் குறிப்பிட்ட படங்களில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். அதற்கு பெரிய இயக்குனர் அல்லது ஹீரோ காரணமாக இருக்கலாம். அந்த படத்தில் நடிக்க மறுத்தால் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடுமோ, வாய்ப்புகள் வராதோ என்ற பயமும் காரணமாக இருக்கும். நான் அப்படி ஒரு அருவருப்பான படத்தில் நடித்தேன். படத்தின் பெயரை குறிப்பிட முடியாது.

பொம்மை மாதிரி

அந்த படத்தில் நடிக்கும்போது என் மீது எனக்கே கோபம், வெறுப்பு வந்தது. படப்பிடிப்பு அரங்கில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டி வந்தது. எனக்கு கொடுத்த வசனங்கள் அவ்வளவு கேவலமாக இருந்தது. அறிவே இல்லாத வசனங்கள் அவை. செட்டில் ஒரு பொம்மை மாதிரி உட்கார்ந்திருப்பேன். அந்த படத்தை இப்போது நினைத்தாலும் அருவருப்பாக உள்ளது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here