கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த உடை விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

பங்கேற்ற பிரபலங்கள்

பிரான்ஸ் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா மே 17ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பல முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்று சிவப்பு கம்பளத்தை அலங்கரிப்பார்கள். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்னர். விழாவில் மாதவனின் ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படம், இந்தியா சார்பில் திரையிடப்படுகிறது. மேலும் ‘தம்பு’ மலையாளப் படமும் திரையிடப்படுகிறது.

தவறாமல் பங்கேற்பார்

உலகெங்கிலும் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் சகோதரர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். பல முன்னணி நடிகைகள் இந்த விழாவில் பங்கேற்று வந்தாலும், நடிகை ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த உடை வித்தியாசமாக இருந்ததால் பலரை கவர்ந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் தவறாமல் கலந்து கொள்பவர் நடிகையும், உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய். நிகழ்ச்சி துவங்கி இத்தனை நாள் ஆகியும் இவர் வராததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று விழாவில் பங்கேற்றார்.

வெளிவரும் விமர்சனம்

எப்பொழுதும் வித்தியாசமான உடையில் பங்கேற்கும் ஐஸ்வர்யா ராய் இந்த ஆண்டும் அதேபோல் வித்தியாசமான உடையில் பங்கேற்றார். கருப்பு மற்றும் சில்வரால் ஆன கவுனை அணிந்திருந்த ஐஸ்வர்யா ராயை அனைவரும் ஆர்வமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்தனர். சோஃபி கோட்யூரால் உருவாக்கப்பட்டிருந்த அந்த கவுனில் அலுமினிய பெயில்லெட்டுகள் மற்று கிரிஸ்டல்களால் ஆன கூரை வடிவ ராட்சத சில்வர் ஹூட்டை வைத்து தலையை கவர் செய்யும் வகையில் இருந்தது. பலர் இவரது உடையை பாராட்டினாலும், சில நெட்டிசன்கள் இவரது உடையை விமர்சனம் செய்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராயின் தலையை சுற்றி கூரைப் போல அந்த உடை இருந்ததனால், இது என்ன உடையா? அல்லது கூரையா? என்று விமர்சனம் செய்து வருகின்றனர். சாதாரண உடை அணிந்தாலே ஐஸ்வர்யா ராய் அழகாக இருப்பார். இவர் எதற்கு இதுபோல் வித்தியாசமாக முயற்சி செய்கிறார் என்று விமர்சனங்களும் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here