தன்னை பல பேர் கேலி, கிண்டல் செய்ததாக நடிகை காஜல் அகர்வால் வெளிப்படையாக கூறியுள்ளார்.

முன்னணி நடிகை

பழனி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். இந்த படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் காஜல். பேரரசு இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. அதன்பின் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை காஜல் அகர்வால், நான் மகான் அல்ல படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். பின்னர் மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களின் ஹிட்டால் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தார் காஜல். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரணுடன் இணைந்து நடித்த மகதீரா திரைப்படமும் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் ஆனது. தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை காஜல் அகர்வால். 2020 ஆம் ஆண்டு கௌதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

பலமான தாயாக வேண்டும்

திருமணம், குழந்தை என்று ஆன பிறகும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில்,”நான் கர்ப்பமாக இருக்கும் பொழுது குண்டாகிவிட்டேன் என்று என்னை பலரும் கேலி செய்தார்கள். என் மகன் நீல் பிறந்த பிறகு சில மாதங்களிலேயே திரும்பவும் படப்பிடிப்பிற்கு சென்றேன். அப்போதும் குழந்தையை விட்டுவிட்டு இப்படி நடிக்க போகலாமா? என்று என்னை விமர்சனம் செய்தார்கள். யார் என்ன நினைத்தாலும் என் மகனுக்கு தான் நான் முதலில் முக்கியத்துவம் கொடுப்பேன். முதல் முறையாக அவனை மார்போடு அனைத்த போது நன்றாக வளர்க்க முடியுமா? என்று பயந்தேன். ஆனால் மெல்ல மெல்ல நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டு சரிசெய்து வருகிறேன். படப்பிடிப்பிற்கு செல்லும் பொழுது என் மனம் வேதனையாக தான் இருக்கிறது. வேளைக்கு போவதால் நான் மகனை அலட்சியம் செய்கிறேன் என்று அர்த்தம் அல்ல. என் மகனுக்கான நேரத்தை நான் ஒதுக்கி வைக்கிறேன். என் மகன் முன் நான் ஒரு பலமான தாயாக நிற்க ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here