நடிகை நித்யா மேனன் மேக் அப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சில தமிழ் படங்கள்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை நித்யா மேனன், மலையாள திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். கேரளாவை பூர்வீகமாக கொண்டுள்ள நித்யா மேனன், அதிக மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் “180” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் நடித்த சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான காஞ்சனா 2, 24, இருமுகன், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் நித்யா மேனனை தமிழ் ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது.

லேட்டஸ்ட் போட்டோ

மலையாளம், தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் நித்யா மேனன். எப்பொழுதும் மேக்கப்புடன் பார்த்து பழகிய நித்யா மேனன், சமீபத்தில் மேக்கப் இல்லாத புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சுருட்டை முடி, சிரித்த முகம், பப்லியாக இருக்கக்கூடிய நித்யா மேனனுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் “நீங்களா இது? மேக்கப் இல்லாமலும் அழகாக இருக்கிறீர்கள்” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here