நடிகை இவானா தனது நண்பர்களுடன் டூர் சென்றுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

முதல் படமே ஹிட்

நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை இவானா, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த இவானாவுக்கு, லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

டூர் அடிக்கும் இவானா

ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.100 கோடிகளுக்கு மேல் வசூலை வாரி குவித்தது. சமீபத்தில் இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையையும் phanton ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியது. ஹீரோயினாக நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதும், இவானாவுக்கு மார்க்கெட் எகிறி உள்ளது. தற்போது இவர் நடிப்பில் கள்வன், எல்ஜிஎம், காம்ப்ளக்ஸ் போன்ற படங்கலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் எல்ஜிஎம் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நடிகை இவானா, சின்ன பிரேக் எடுக்கும் விதமாக கேரளாவில் தனது நண்பர்களுடன் டூர் அடித்து வருகிறார். அதுதொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here