பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நடிகை தேவயானியின் மகளுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

டாப் நடிகை

1980 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் நடிகை தேவயானி. சரத்குமார், அஜித், விஜய் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்து ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த படமாக இருக்கின்றது. சூரியவம்சம், மறுமலர்ச்சி, சொர்ணமுகி, நினைத்தேன் வந்தாய், பிரண்ட்ஸ் போன்ற பல ஹிட் படங்களையும் கொடுத்தவர் தேவயானி.

நல்ல மதிப்பெண்

வெள்ளித் திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளார் தேவயானி. அதில் குறிப்பாக, கோலங்கள், ராசாத்தி போன்ற தொடர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை ஆகும். காதல் கோட்டை, சூரியவம்சம், பாரதி போன்ற படங்களுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார். இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை தேவயானிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் இனியா, இளைய மகள் பிரியங்கா. சமீபத்தில் மூத்த மகளான இனியா பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், அதில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளார். இனியா 600க்கு 498 மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த பலரும் தேவயானியின் மகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here