விஜய் ஆண்டனி இயக்கி, தயாரித்து, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல வரவேற்பை பெற்று வருகிறது.

மாஸ் டிரெய்லர்

2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று நேற்று போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது. ஆனால் சொன்னதை விட ஒரு மணி நேரம் லேட்டாகவே பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது. இருந்தாலும் இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாகவே வந்திருக்கிறான் பிச்சைக்காரன்.

கோடீஸ்வர பிச்சைக்காரன்

பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லரில், இந்தியாவின் ஏழாவது பெரிய பணக்காரன், ஒரு லட்சம் கோடிக்கு சொந்தக்காரன் என செம மாஸ் ஆக விஜய் ஆண்டனியை அறிமுகம் செய்கின்றனர். பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த படத்தின் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கியது மட்டும் அல்லாமல் தயாரித்து, நடித்து, இசையமைத்துள்ளார் விஜய் ஆண்டனி. இதில் காவியா தப்பார், ரித்திகா சிங், யோகி பாபு, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள பிஜிஎம் வேற லெவல் கூஸ்பம்ஸாக அமைந்துள்ளது. தனி விமானம், கன்டெய்னர் என்று மொத்தமும் பணம் என அதிரடியாக வெளியாகி உள்ள இந்த டிரெய்லரை, விஜய் ஆண்டனி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மே 19ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படம், பிச்சைக்காரன் முதல் பாகம் போல் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here