தென்காசியில் நடந்த கேப்டன் மில்லர் பட ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இப்போது மீண்டும் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலமான கூட்டணி

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் தனுஷ், வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், திரைப்படத்தின் பாடல்கள் மட்டும் ரசிகர்களை கவர்ந்தது. வாத்தி படத்தை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார் நடிகர் தனுஷ். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து ஜான் கொக்கேன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மீண்டும் துவக்கம்

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தென்காசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தென்காசியில் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது குண்டுவெடிப்பு காட்சிகள் எடுத்ததாகவும், அப்போது ஏற்பட்ட பயங்கர சத்தம் அந்த பகுதியில் வசிப்பவர்களை பெரும் அச்சமடைய செய்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் வன விலங்குகள் மற்றும் அங்கு இருக்கக்கூடியவர்களுக்கு பெரும் அச்சம் நிலவுவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக பட ஷூட்டிங் அதிரடியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் முறையான அனுமதி பெற்றுவிட்டதாகவும், இதனால் மீண்டும் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here