அஜித் ஷாலினி இடையே காதல் மலர்ந்த கதை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
நட்சத்திர தம்பதிகளாக இருக்கும் அஜித்குமார் மற்றும் ஷாலினி தற்போது தங்களது திருமண வாழ்க்கையில் 23 ஆண்டுகளை கடந்துள்ளனர். அமர்க்களம் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்த போது ஏற்பட்ட காதல், பிறகு திருமணத்தில் முடிந்தது. அந்த திரைப்படம் வெளிவந்த சமயத்தில் ஆன் ஸ்கிரீனில் இவர்கள் ஜோடி பிரபலமாக பேசப்பட்டது. மேலும் அமர்க்களம் படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் அனைத்தும் இவர்களுக்காகவே எழுதப்பட்டது போல் அமைந்தது. ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாரிய பின்னர், இவர்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இந்நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்ட அந்த தருணத்தை அஜித் தனது பழைய பேட்டியில் கூறியுள்ளார். அஜித் குமாரின் திருமண நாளன்று அவர் கொடுத்த பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
குற்றவுணர்ச்சியில் அஜித்
அமர்க்களம் திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது ஷாலினியின் கையில் காயம் ஏற்பட்டது. தவறுதலாக ஷாலினியின் கையில் கத்தியால் வெட்டப்பட்டு விபத்து ஏற்பட்டது. அப்பொழுது அஜித் குற்ற உணர்ச்சியில் இருக்கும் பொழுது ஷாலினி மீது அதிக அக்கறையுடன் நடந்து கொண்டது ஷாலினிக்கு பிடித்துப் போக, அவரை காதலிக்க தொடங்கினார். அதன்பிறகு இருவருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது பிறகு காதலாக மாறி திருமண வாழ்க்கையில் நுழைந்தனர் என்பதை அஜித்குமார் தனது பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தங்களது திருமண நாளை முன்னிட்டு அஜித்துடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஷாலினியின் பதிவு தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகின்றது. அஜித் – ஷாலினி தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.