நடிகை இலியானா கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

நண்பன் ஹிட்

தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான நடிகை இலியானா, தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். ரவி கிருஷ்ணாவுடன் இணைந்து இவர் நடித்த கேடி திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. பிறகு தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த இலியானா, தமிழில் நண்பன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் இலியானாவின் மெல்லிய தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாலிவுட்டில் செட்டில்

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்த நடிகை இலியானா, ரன்பீர் கபூருடன் இணைந்து பர்ஃபி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான முதல் ஹிந்தி படமே சூப்பர் ஹிட் ஆனதால், பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன்பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்காமலேயே இருந்து வந்த இவர், கத்ரீனா கைஃப் சகோதரரை காதலிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் வெளிப்படையாக கூறாமல் இருந்து வந்த இலியானா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா புகைப்பட கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கர்ப்பத்தை கூறும் விதமாக ஒரு குட்டி உடையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இலியானா, “என் சிறிய அன்பை, இனியும் உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது” என பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் இலியானாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here