ரசிகர்களிடம் செல்ஃபி மோகம் அதிகரித்துவிட்டதாக நடிகை நவ்யா நாயர் வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

மீண்டும் ஆர்வம்

அழகிய தீயே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நவ்யா நாயர், தமிழில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், சில நேரங்களில், ரசிக்கும் சீமானே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் அதிக படங்கள் நடித்துள்ள நவ்யா, 2010 ஆம் ஆண்டு சந்தோஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு பிரேக் கொடுத்து வந்த நடிகை நவ்யா நாயர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் தனது மறு பிரவேசம் சிறப்பாக உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு தான் எதிர்பார்த்ததற்கும் மேலாக இருக்கிறது என்றும் பல கதைகள் கேட்டு, அவற்றில் சில கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

வருத்தமான நவ்யா

கடந்த சில வருடங்களாக சினிமா துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது என்று கூறியுள்ள அவர், தற்போது ஹீரோ, ஹீரோயினை தாண்டி, ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள அனைவருக்கும் வசதி செய்து கொடுக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் தற்போது ரசிகர்கள் மத்தியில் செல்ஃபி மோகம் அதிகரித்துவிட்டதாக அவர் கவலையுடன் கூறியுள்ளார். உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் பொழுதும், இறப்பு வீட்டுக்கு செல்லும் பொழுதும் ரசிகர்கள் செஃல்பி எடுக்க ஆர்வம் காட்டுவதாக நடிகை நவ்யா நாயர் வருத்தமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here