நடிகை மாளவிகா அவினாஷ் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல நடிகை

ஜே ஜே படத்தில் ஹீரோயினின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். கன்னட படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான மாளவிகா, கள்வனின் காதலி, ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்திலும் நடித்துள்ள மாளவிகா கே ஜி எஃப் 2 படத்திலும் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மாளவிகா அவினாஷ்.

மருத்துவமனையில் அனுமதி

நடிகையாக மட்டுமில்லாமல் 2013 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தற்போது வரை அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”உங்கள் யாருக்காவது ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருந்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படி எடுத்துக் கொண்டால் என்னை போன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவீர்கள்” என குறிப்பிட்டு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here