தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 3 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழகம், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிக வெப்பம்
நாளை, நாளை மறுநாள், தென் தமிழகம், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.