அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேரில் ஆறுதல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் கடந்த 24ஆம் தேதி வயோதிகம் காரணமாக உடல்நலக் குறைவால் காலமானார். அஜித்தின் தந்தை மறைவு செய்தி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நேரில் சென்று தங்களது இரங்கல்களை தெரிவித்து, நடிகர் அஜித்துக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
வாழ்த்துக்கள் கூறிய அஜித்
அஜித்தின் தந்தை மறைவு செய்தியை கேள்விப்பட்டவுடன் பல சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதளத்தின் மூலமாக அஜித்துக்கு ஆறுதல் கூறிவந்தனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதனைதொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் அஜித்குமாரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.