32 ஆண்டுகள் கழித்து சத்யராஜ் மற்றும் ஷோபனா மலையாளத்தில் ‘ஒட்ட’ என்ற படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

மிரட்டும் சத்யராஜ்

70களில் நடிக்க துவங்கிய சத்யராஜ், ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு ஹீரோவாக மட்டும் இல்லாமல், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் இன்று வரை முன்னணியில் இருந்து வருகிறார். தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சத்யராஜ். அந்த வகையில் ‘பாகுபலி’ படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த சத்யராஜ் சமீபத்தில் ‘லவ் டுடே’ படத்தில் நடித்து அசத்தினார்.

32 ஆண்டுகள் பிறகு

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு சிறந்த சவுண்ட் இன்ஜினியர் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி, 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தி சவுண்ட் ஸ்டோரி’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்நிலையில் தற்போது ‘ஒட்ட’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார் ரசூல் பூக்குட்டி. இந்த படத்தில் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் நடிகை ஷோபனா இந்த படத்தில் இணைந்துள்ளார். 1989இல் வெளியான ‘வாத்தியார் வீட்டு பிள்ளை’ மற்றும் ‘மல்லு வேட்டி மைனர்’ என்ற இரண்டு படங்களில் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷோபனா. தற்போது 32 ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவரும் மலையாள படத்திற்காக இணைந்துள்ளனர். 32 ஆண்டுகள் கழித்து இணைந்துள்ள இவர்களின் கதாபாத்திரம் இந்த படத்தில் பிரபலமாக பேசப்படும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here