நடிகைகள் மீனா மற்றும் சினேகா அவர்களது நண்பர்களுடன் மகளிர் தினத்தை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
முன்னணி நடிகை
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து மிகவும் பிரபலமானார். திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை கடந்த மீனாவுக்கு சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக “மீனா 40” என்ற பெயரில் நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. இதில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து நாயகியாக நடிக்க துவங்கிய மீனா, ராஜ்கிரண்னுடன் என் ராசாவின் மனசிலே படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். அது மட்டுமில்லாமல் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த எஜமான் படத்திலும் இவரது கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.
மகளிர் தின கொண்டாட்டம்
முன்னணி நடிகர்களான கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரிடத்திலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் பிசியாக இருந்து வரும் நடிகை மீனா, தனது வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும், சோகங்களையும் தாண்டி இன்றும் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நேற்று உலக மகளிர் தினத்தை நடிகை மீனா, சினேகா ஆகியோர் தங்களது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.