கமெண்ட் பதிவிடும் ரசிகர்கள் யாரையும் கேலி செய்ய வேண்டாம் என்று பாக்கியலட்சுமி தொடர் கோபி கோரிக்கை வைத்துள்ளார்.
போராடும் பாக்யா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கு மத்தியில் பாக்கியலட்சுமி தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இதில் பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்களை கொண்டு ஒளிபரப்பாகி வருகின்றது. எப்போதும் சமையல் செய்து கொண்டு உலக அறிவே இல்லாத பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு நீண்ட வருடம் காதலியாக இருக்கும் ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. அதற்குப் பிறகு பல போராட்டங்களைக் கடந்து சாதனைகளை செய்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் தனது குடும்பத்தை தனியாளாக நின்று காப்பாற்றியும் வருகிறார்.
விலக வில்லை
சமீபத்தில், ஆங்கிலம் பேச தெரியாத பாக்கியாவை ராதிகா கேவலமாக பேச, ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குகிறார் பாகிக்யா. இந்த இடத்தில் பாக்கியாவிற்கு உறுதுணையாக இருக்க ஒரு முக்கியமான கேரக்டர் தேவைப்படுகிறது என்பதால் புதிய வரவாக பழனிச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஞ்சித்தை அறிமுகம் செய்தனர். பழனிச்சாமி கதாபாத்திரம் பாக்கியாவிற்கு உதவி செய்யும் கேரக்டராக இருப்பதால், இனி அதிக அளவில் இவர் தொடரில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அது மட்டுமில்லாமல் கோபி கதாபாத்திரத்திற்கக்கு சற்று கேப் இருக்கும் என்று கூறி வந்த நிலையில், பல ஊடகங்களும் சீரியலை விட்டு கோபி விலகுவதாக கூறி வந்தனர். ஆனால் அதற்கு வீடியோ மூலம் கோபி (சதீஷ்குமார்) விளக்கமும் கொடுத்துள்ளார். அதாவது சீரியலில் இருந்து நான் ஒட்டுமொத்தமாக விலகவில்லை எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் சற்று குறையப்படுத்துவதால் நான் சில நாட்கள் ஓய்வெடுக்கப் போகிறேன் என்று தான் கூறினேன் என்றார்.
கோரிக்கை வைத்த கோபி
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய சதீஷ்குமார் சமீபத்தில் ஒரு இன்னொரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் அவர் கூறி இருப்பதாவது; “எல்லோருக்கும் இனிய காலை வணக்கம். இன்று நான் சுயநலமாக ஒரு வேலை செய்யப் போகிறேன். இந்த இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் என்னுடையது மட்டும் அல்ல, பாக்கியலட்சுமி என்ற தொடர் மூலம் நாம் அனைவரும் இணைந்து இருப்பதால், இது நம் அனைவரின் அக்கவுண்ட் என்று நினைக்க வேண்டும். சில ரசிகர்களுக்கு நான் கோரிக்கை வைக்கப் போகிறேன். தொடர்களில் நடிக்கும் நடிகர்கள் அதுவும் பெண் பிள்ளைகள் குறித்து கமெண்ட் செய்யும் பொழுது யோசித்து கமெண்ட் செய்ய வேண்டும். அவர்கள் குள்ளமாகவோ, உயரமாகவோ அல்லது கருப்பாகவோ, வெள்ளையாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களின் உடல் அமைப்பை வைத்து யாரும் கேலி செய்ய வேண்டாம். யார் மனதையும் புண்படுத்தும் அளவிற்கு கமெண்ட்டுகள் பதிவு செய்ய வேண்டாம். நாம் இருக்கும் கொஞ்ச நாட்களில் சந்தோஷமாக இருக்கலாம்” என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் சதீஷ்.