தளபதி 67 படத்தின் மூலம் 3-வது முறையாக விஜய்யுடன் கைகோர்க்கிறது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம்.

தளபதி 67

‘வாரிசு’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஏற்கனவே மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி 67 படம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறது. இதையடுத்து இப்படத்தின் அப்டேட் நேற்று மாலை வெளியானது. அதன்படி, தளபதி 67 படக்குழு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

3-வது முறை

இதுதொடர்பாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தங்களது பெருமைமிக்க புதிய படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் உற்சாகம் அடைகிறது. பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற மாஸ்டர் மற்றும் வாரிசு ஆகிய படங்களை தொடர்ந்து, தளபதி விஜய்யுடன் 3-வது முறையாக இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘மாஸ்டர்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குைார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

மீண்டும் கூட்டணி

தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவரின் கூட்டணியில் உருவாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கத்தி, மாஸ்டர், பீஸ்ட் என அதிர வைக்கும் ஆல்பங்களை கொடுத்த ராக் ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். தளபதி 67 படத்திற்கு உங்களுடைய ஆதரவையும், வாழ்த்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here