விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது 6-வது சீசனை பிரம்மாண்டமாக கடந்துள்ளது. ஜிபி முத்து, நடன இயக்குநர் சாந்தி, அசல் கோளாறு, அசீம், விக்ரமன், ஷிவின், ரச்சிதா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அசீமின் வெற்றி குறித்து பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், அசீமை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா விஜயக்குமார் அவருக்கு ஆதரவளித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வனிதா, ”இங்கு நாங்கள் யாருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வரவில்லை, நாங்க எல்லாம் ரூல்ஸை பிரேக் பண்றவங்க,” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here