முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஆன்மீக டாக் ஷோ ஒன்றை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

புது முயற்சி

முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் கலர்ஸ் தமிழும் ஒன்று . தினம் தினம் புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை தன்வசம் வைப்பதில் கவனம் செலுத்தி வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பங்கேற்கும் சிந்தனைகள் சிம்பிளிஃபைட் என்ற புதிய ஆன்மீக நிகழ்ச்சியையும் அறிமுகமாகியுள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி திரையுலகில் முன்னணி பிரபலங்கள் பங்கேற்று கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆன்மீக நிகழ்ச்சி என்றாலே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்த கலர்ஸ் தமிழ் ,இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

1 மணி நேரம்

ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கிய நிகழ்ச்சி “ஆர்ட் ஆஃப் லிவிங்” அறக்கட்டளை ஒத்துழைப்போடு உரையாடல் டாக் ஷோ ஆகும். வாழ்க்கைக்கு தேவையான அன்பு, காதல், வெற்றி, உடல் நலம், மன நலம் ,ஆன்மீகம், நம்பிக்கை, தைரியம், போன்ற பல விஷயங்களைப் பற்றி சிந்தனைகளை குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் வழங்கி வருகிறார். ஆகஸ்ட் 23-ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த ஆன்மீக நிகழ்ச்சி முதல் எபிசோடுக்கு இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் கலந்து கொண்டு ஆறுமுக படுத்தி பேசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இனி வரும் வாரங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி ராமகிருஷ்ணன், கௌதம் மேனன், ஆண்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே, போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாட இருக்கின்றனர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது தமிழ் மேட்ரிமோனி நிறுவனம். ஒரு எபிசோடு 60 நிமிடங்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர்.ஆன்மீக நிகழ்ச்சியை பார்த்து மக்கள் பயன்பெறவே இந்த புது முயற்சியை எடுத்துஉள்ளது கலர்ஸ் தமிழ் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here